தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean
தனியாய் எங்கும் அலைந்தேனே
உறவுகள் இல்லை ஏங்குகின்றேன்
குப்பை என்று கருதப்பட்டேன்
கர்த்தர் என்னை கரம் பிடித்தார்
1.நான் ஒரு தனிமரமாகவே இருந்தேன்
சொந்தமாய் என்னிடம் ஒன்றுமில்லை
கனியற்ற மரமாய் சோர்வடைந்தேன்
பயனுள்ள மரமாய் தழைக்க செய்தார்
2.இயேசு என் அருகினில் நிற்பதை கண்டேன்
நீ அறியாத காரியம் செய்வேன் என்றார்
நல்ல மேய்ப்பனின் சத்தம் கேட்டேன்
நிறைவான கனிகளை கொடுக்க செய்தார்
3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேனே
இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுவேன்
அறுபதும் நூறுமாய் பலன் தருவேன்
அவருக்காய் செழிப்பாய் வளர்ந்திடுவேன்
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam