சகோதரர் ஒருமித்து வசிப்பது -Sagotharar Orumithu vasippathu

Lyrics:
சகோதரர் ஒருமித்து வசிப்பது
அது எத்தனை நன்மையும் இன்பமுமானது
சகோதரர் ஒருமித்து வசிப்பது
அது எத்தனை நன்மையும் இன்பமுமானது

அது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றபட்டதும்
அவன் தாடியில் வழிகிறதும்
அவன் அங்கிகளில் விழுகிறதும்
நல்ல தைலத்திற்கு ஒப்பானதே
நல்ல தைலத்திற்கு ஒப்பானதே

எர்மோன் மலையின் மேலே சீயோன் பர்வதங்கள் மேலே
இறங்கும் பனிக்கு ஒப்பானதே
எர்மோன் மலையின் மேலே சீயோன் பர்வதங்கள் மேலே
இறங்கும் பனிக்கு ஒப்பானதே
அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும்
ஜீவனையும் கட்டளையிடுகிறார்
அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும்
ஜீவனையும் கட்டளையிடுகிறார்

சகோதரர் ஒருமித்து வசிப்பது
அது எத்தனை நன்மையும் இன்பமுமானது
சகோதரர் ஒருமித்து வசிப்பது
அது எத்தனை நன்மையும் இன்பமுமானது

Sagotharar Orumithu | சகோதரர் ஒருமித்து | Rolling Tones Choir | Tamil Christian Gospel 2021

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version