ஓ இஸ்ரவேலின் மேய்ப்பரே – Oh Isravealin Meipparae
1. ஓ! இஸ்ரவேலின் மேய்ப்பரே நீர்,
என் உள்ளத்தின் ஆனந்தமே,
நான் உம்மண்டை வசித்திட
வாஞ்சிக்குது எந்தனுள்ளம்
மேய்ப்பரையே கீழ்ப்படிவோர்
நல்மேய்ச்சலைக் கண்டடைவார்,
நீர் மார்பில் அணைத்திடவே
பகல் வெயில் பட்டிடாதே
2. காட்டும் தேவா உம் ஜனத்தின்
பேரின்பமாம் வாசஸ்தலம்,
நோக்கிடுவார் சுத்தர் அங்கு
சேர்ந்திருப்பார் தேவனோடு;
உம்பாடு மரணமுமே
காட்டும் பாவிக்குமதன்பை
உம்மோடு வெற்றி சிறக்க
கல்வாரிக்கு ஓட்டுதென்னை
3. உம் மந்தை தங்குமிடத்தில்
வாஞ்சிக்கின்றேன் இளைப்பாற,
கன்மலையின் ஒதுக்கிலும்
உம்மார்பிலும் நான் மறைவேன்;
எப்போதும் அங்கு தங்குமேன்
ஓர் போதும் நான் பிரிந்திடேன்;
உம் குத்துண்ட விலாவினில்
அடைக்கலம் தந்தருளும்
1.Oh Isravealin Meipparae Neer
En Ullaththin Aananthamae
Naan Ummandai Vasiththida
Vaanjikkuthu Enthanullam
Meaipparaiyae Keezhpadivor
Nalmeisalai Kandadaivaar
Neer Maarbil Anaithidavae
Pagal veayil Pattidaathae
2.Kaattum Devaa Um Janaththin
Pearinbamaam Vaasasthalam
Nokkiduvaar Suththar Angu
Searnthiruppaar Devanodu
Umpaadu Maranamumae
Kaattum Paavikumathanbai
Ummodu Veattri Sirakka
Kalvaarikku Oottuthennai
3.Um Manthai Thangumidahthil
Vaanjikkirean Elaipaara
Kanmalaiyin Othukkilum
Ummaarpilum Naan Maraivean
Eppothum Angu Thangumean
Oor Pothum Naan Pirinthidean
Um Kuthunda Vilaavinil
Adaikkalam Thantahrulum