என்ன துன்பநாள் – Enna ThunbaNaal
பல்லவி
என்ன துன்பநாள்! இயேசென்னோடில்லா நாள்
இன்பமே தோன்றாத நாளாம் – என் வாழ்வு நாள்
அனுபல்லவி
ஒளிமங்கிப் போனநாள் மகிழொழிந்திட்ட நாள்!
எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்பநாள்!
சரணங்கள்
1. அவர் பேர் சுகந்தமே அவர் சத்தம் இன்பமே!
அவர் முன்னென் துயர் போமோ-மா நேர்மையே!
பயமொன்று மில்லையே பரனடி நிற்கவே
தயவுள்ள இயேசு எந்தன் தாபரம் இதுண்மையே – என்ன
2. கண்டு நான் மகிழ்வேன் கர்த்தன் முகம் தனையே
கொண்டு வைத்தேனெனதெல்லாம் – என் நாதன் முன்,
ஒன்றுமே இவர்க்கு ஒப்பில்லை – எனக்கு
என்றும் இன்பம் தந்து இயேசு என்னில் வசிப்பதற்கு – என்ன
3. ஆ எந்தன் தேவனே நானுந்தன் தாசனே!
நீரெனது தஞ்சமானால் தயக்கமேன்?
கெஞ்சுறேன் நானே, கிருபை கூர்ந்தையனே!
புன்னகையோடென்னை ஆண்டு பொற்பதி சேர் மெய்யனே!
Enna ThunbaNaal Yeasennodillaa Naal
Inbamae Thontraatha Naalaam En Vaaluv Naal
Olimangi Poona Naal Magilolinthitta Naal
Ezhil Yeasennodirunthaal Enakkathu Inba Naal
1.Avar Pear Suganthmae Avar Saththam Inbamae
Avar Munnen Thuyar Pomo Maa Nearmaiyae
Bayamontru Millaiyae Paranadi Nirkavae
Thayavulla Yesu Enthan Thaaparam Ithunmaiyae
2.Kandu Naan Magilnthiduvean Karththan Mugam Thanaiyae
Kondu Vaithaen Enathellaam En Naathan Mun
Ontrumae Evarkku Oppillai- Enakku
Entrum Inbam Thanthu Yesu Ennil Vasippatharkku
3.Aa Enthan Devanae Naanunthan Thaasanae
Neereanathu Thanjamaanaal Thayakkamean
Kenjukirean Naanae Kirubai Koornthaiyanae
Punnagaiyodennai Aandu Porpathi Sear Meiyanae