ஆண்டவர் பங்காக அனைத்தையும்- Aandavar Pangaga Aanaithaiyum

பல்லவி

ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,
அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்
இன்பந்தனைப் பாரும் .

அனுபல்லவி

வான்பல கணிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்டவர்

சரணங்கள்

1. வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே -அந்த
மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட
விதித்தது தானே .
வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,
வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்டவர்

2. ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய
அருட்பணி பேண, -தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண ,
ஏழைகள் ,கைம்பெண்கள் ,அனாதப்பாலர்கள்
எதுகரமற்ற ஊனர், பிணியாளர்,
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட .-ஆண்டவர்

3. நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து ,-நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வாறன்பு கூர்ந்து ,
நன்மை புரிந்த பிதாவைக் கனம் பண்ண
நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்
சம்மதமே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் ; மாவிந்தையல்லவோ? –ஆண்டவர்

அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

And the man said, The woman whom thou gavest to be with me, she gave me of the tree, and I did eat.

ஆதியாகமம் | Genesis: 3: 12

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version