இயேசு நாமமல்லாம் உலகினில் – Yesu Naamam Ulaginil

இயேசு நாமமல்லாம் உலகினில் – Yesu Naamam Ulaginil

பல்லவி

யேசு நாமமல்லாம்-உலகினில்
வேறு நாமம் இல்லை,-கிறிஸ்து

அனுபல்லவி

தேசுலாவிய கேரூபீம்பணி
திவ்ய வானவர் முனிவர் கண்மணி,
மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி,
மதிக்கும் சத்திய வேத சிரோமணி – யேசு

சரணங்கள்

1. வானமும் புவியும்-கதி-ரோன் மதி உடுவும்
கானல் வரை கடலும்-நர-ரான எவ்வுயிரும்
தானே படைத்தருள் ஆதி காரணன்,
சர்வ ஜீவ தயாபரா பூரணன்,
ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன்,
இலங்கும் வேத சங்கீத பாராயணன். – யேசு

2. காவிலாத மேவை-செய்-தீவினையதனால்
பூவின் மாந்தர் படும்-துயர்-தேவ கோபமற,
பாவிகளைப் பரனோடுற வாக்கப்,
பரம எருசலேம் நகர் சேர்க்க,
மேவுமலகை அரணைத் தூளாக்க,
மேதினியில் சமாதானம் உண்டாக்க. – யேசு

3. பண்டு வேதியர்கள்-கைக்-கொண்ட மாமறையில்
விண்ட நாமமல்லாமல்-உயர்-அண்ட மீதினிலும்,
மண்டலத்திலும், ஆழி கீழிலும்
மாருதம் செலும் அட்ட திக்கிலும்,
தொண்டர் கூக்குரல் எட்டும் தூரத்திலும்,
துஷ்டர் வர விரும்பாத இடத்திலும். – யேசு

கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.

O LORD, I have heard thy speech, and was afraid: O LORD, revive thy work in the midst of the years, in the midst of the years make known; in wrath remember mercy.

ஆபகூக் : Habakkuk:3:2

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version