Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு

Deal Score0
Deal Score0

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு

சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்
சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே
வாழ்வு தந்திடவோ வாழ்வை இழந்தனையோ
வாழ்வு தந்திடவோ உன் வாழ்வை இழந்தனையோ

சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்
சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே

1.கரத்தில் காயம் பாதத்தில் காயம்
மார்பில் காயம் முதுகில் காயம்
கரத்தினாலே எத்தனை நன்மை
நீயும் செய்து வந்தீர்
பாதத்தினாலே நடந்து நடந்து
வாழ்வை நீர் கொடுத்தீர்
இயேசுவே உன் அன்பு பெரிது
இயேசுவே உன் பாசம் பெரிது
இயேசுவே உன் அன்பு பெரிது
இயேசுவே உன் பாசம் பெரிது

சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்
சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே

2.உடலை கொடுத்தீர் உயிரைக் கொடுத்தீர்
உணவாய் கொடுத்தீர் இரசமாய் கொடுத்தீர்
உடலை உண்டு எந்தன் வாழ்வில்
எத்தனை சுகங்கள் நான் கண்டேன்
இரத்தத்தை பருகி இழந்த வாழ்வை
எத்தனை முறை நான் பெற்றுக் கொண்டேன்
இயேசுவே என்னை பாதுக்காதீர்
இயேசுவே என்னை வாழவைத்தீர்
இயேசுவே என்னை பாதுக்காதீர்
இயேசுவே என்னை வாழவைத்தீர்

சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்
சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே
வாழ்வு தந்திடவோ வாழ்வை இழந்தனையோ
வாழ்வு தந்திடவோ உன் வாழ்வை இழந்தனையோ

சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்
சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே
siluvai Marathinilae Yesu Thudikintraar

    Jeba
        Tamil Christians songs book
        Logo