Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன்
Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன்
இரட்டிப்பான நன்மையை தருவேன் என்றீரே
இன்றைக்கே தருவேன் என்று வாக்குரைத்தீரே
இழந்ததை திரும்பத் தருவேன் என்று சொன்னீரே
இரட்டிப்பான பங்கையும் தந்திடுவாரே
சோர்ந்து போகாதே கலங்கி போகாதே
வாக்கு உரைத்தவர் வாக்கு மாறாரே
1.அரணுக்கு திரும்பி வா நம்பிக்கையோடு
சகலமும் நன்மையாய் மாற்றிடுவாரே
தொலைந்து போன வாக்குத்தத்தம் இன்றே நிறைவேறும்
சொன்னவர் சொன்னதை செய்து முடிப்பாரே
2.காரியம் கைகூடும் நேரம் வந்ததே
காத்திருந்த நாட்களும் இன்றே முடிந்ததே
எதிர்பார்த்த நன்மைகள் கையில் சேருமே
நீ நம்பினதை உனக்கு வாய்க்க செய்வாரே
3.தீமையை நன்மையாக மாற்றிடும் தேவன்
கூடாரத்தின் குறைவுகளை அகற்றிடுவரே
முடிந்ததை மறுபடியும் துளிக்க செய்வாரே
எல்லையில் மகிழ்ச்சியை காண செய்வாரே