Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே
Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே
புது வருடம் இன்று பிறந்ததே !!
புதிய வாசல்கள் இன்று திறக்குதே !!
புதுப்புது நன்மைகள் பொழியுதே !!
புதிய கிருபையும் உன்னைத் தொடருதே…
குறிக்கப்பட்ட தரிசனங்கள் நிறைவேறுதே
கொடுக்கப்பட்ட வாக்குகள் செயல்படுதே..
நிச்சயித்த காரியம் நிச்சயமாய் உன்வாழ்வில்
இந்த ஆண்டு நிறைவேறுமே ..ஆஹா ஹா(2) (புது வருடம்..
மறைக்கப்பட்ட காரியங்கள் வெளிப்படுதே
மன்னவனின் அன்புக்கரம் நீட்டப்படுதே…
மன்னன் இயேசுவின் கரம் நிச்சயமாய் உன்வாழ்வில்
இந்த ஆண்டு நீட்டப்படும் ..ஆஹா ஹா(2) (புது வருடம்..
பயத்தின் ஆவியை நீக்கிடுவார்
புத்திரசுவிகார ஆவி ஊற்றிடுவார்..
அபிஷேகத்தின் ஆவியை இந்த ஆண்டு உன்மேலே
அனலாய் ஊற்றிடுவார் ..ஆஹா ஹா (2) (புது வருடம்..
மந்திரத்தின் ஆவியை நீக்கிடுவார்
விடுதலையின் ஆவியை ஊற்றிடுவார்
மந்திரவல்லமை யாவையும் உன்னைவிட்டு விலக்கியே
இந்த நாளில் விடுவிப்பாரே ..ஆஹா ஹா (2) (புது வருடம்