Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார்
Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார்
பல்லவி.
புதிய ஆண்டு தந்துவிட்டார் எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார் கர்த்தர் தந்த வாக்குகளை இந்த ஆண்டில் சுதந்தரிப்போம். 2.
எதிராய் வந்த சத்துருக்கள் இனியும் நம்மை தொடர்வதில்லை.
அனுபல்லவி.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை. 2.
வாய்க்கால் ஓரம் நடப்பட்டு வருத்தம் இன்றி கனி கொடுப்போம் 2.
வேர்கள் எல்லாம் தண்ணீருக்குள் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வார். 2.
அனுபல்லவி.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை.
வாலாக்காமல் தலையாக்குவார் கீழாக்காமல் மேலாக்குவார்.
ஏற்ற காலம் மழை பொழியும் வறட்சி என்றும் வருவதில்லை. 2.
அனுபல்லவி.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை.
Rap.
வாக்குதத்தங்களை அள்ளி கொடுப்பவர் எப்போதும் நம்மோடு என்றும் இருப்பவர்
பாதம் தரையில் படாமல் தாங்குபவர்
நம்மை அவர் தோளில் தூக்கி சுமப்பவர்
பல சோதனைகள் நமக்கிருப்பதை சாதனையாய் மாற்ற அவர் துடிக்க
நம் சாபம் முறிக்க
மண்ணில் பிறக்க
அவர் அவதரிக்க
நியூ வருடம் பிறக்க.
எல்லாம் இழந்து தனிமையிலே கண்ணீர் கடலில் அமிழ்ந்தாலும்.
இழந்த அனைத்தும் திருப்பிக் கொள்வோம் ஒன்றும் அதிலே குறையாதே.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை.
பல்லவி.
புதிய ஆண்டு தந்துவிட்டார் எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார் கர்த்தர் தந்த வாக்குகளை இந்த ஆண்டில் சுதந்தரிப்போம்.
எதிராய் வந்த சத்துருக்கள் இனியும் நம்மை தொடர்வதில்லை.
அனுபல்லவி.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை.