Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே
Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே
நீர் என்னை பார்க்கும் தெய்வமே – உந்தன்
பார்வையில் என்றும் நான் உள்ளேன்
உம்மை விட்டு எங்கே சென்றாலும் – எனக்கது
நிம்மதி தந்திடுமோ -(2)
1.என் இஷ்டம் இதுவே என்று
வாழ்ந்தேனே பல நாட்கள்
அது உமக்கு வேதனை என்று
நினையாமல் வாழ்ந்தேன் -(2)
காலங்கள் சென்றதே
கண்கள் திறக்கவில்லையே
கல்லூரி வாழ்க்கையினால்
உலகம் என்றிருந்தேன் -(2)
மனம் போன போக்கில் வாழ்ந்தேன்
உம்மை அறிந்தும் தேடவில்லை
இந்த உலகம் காட்டும் வழியே
பெரிதென்று வாழ்ந்து விட்டேன் -(2)
– நீர் என்னை பார்க்கும்
2.உலகத்தை நேசித்தேன்
அதற்காகவே வாழ்ந்தேன்
தவறு என்று தெரிந்தும் அதிலே
துனிந்து நான் வாழ்ந்தேன் -(2)
ஏமாற்றம் அடைந்தேனே
கேளிக்கு ஆளானேன்
கனவெல்லாம் கற்பனையாய்
காற்றோடு பறந்ததே -(2)
மனம் போன போக்கில் வாழ்ந்தேன்
விட்டுவிடவும் முடியவில்லை
இந்த நேசம் பாசம் எல்லாம்
பொய் என்று அறியவில்லை -(2)
– நீர் என்னை பார்க்கும்
3.என்னை அழைத்த நோக்கம் வேறு
நான் வாழ்ந்த வாழ்க்கை வேறு
ஆனாலும் என்னை நீர்
வெறுக்கவே இல்லை -(2)
உம் அன்பின் ஆழத்தை
புரிந்து கொள்ள செய்தீரே
என் பாவம் அனைத்தையும்
தூக்கி எறிந்து விட்டீரே -(2)
மனம் போன போக்கில் வாழ்ந்தேன்
என்னை மன்னியும் இயேசுவே
உம் அன்பால் என்னை மூடி
தினம் ஆளுகை செய்யுமே -(2)
– நீர் என்னை பார்க்கும்
En Ishtam Ithuvae song lyrics – என் இஷ்டம் இதுவே