Nandriyodu Naan Paadiduvean song lyrics – நன்றியோடு நான் பாடிடுவேன்
Nandriyodu Naan Paadiduvean song lyrics – நன்றியோடு நான் பாடிடுவேன்
நன்றியோடு நான் பாடிடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளை
கிருபையால் நடத்தினீரே
நன்றி செலுத்திடுவேன்
1.இம்மட்டும் நடத்தினவர்
இனியும் நடத்திடுவார்
கண்மணிபோல காத்த இரட்சகர்
கரம்பற்றி நடத்திடுவார்
2.தடைகள் வந்தபோதும்
தாங்கிய நடத்தினீரே / உம் தயவால் நடத்தினீரே
தடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன்
3.எப்பக்கம் நெருக்கப்பட்டும்
மடியாமல் காத்துக்கொண்டீர்
நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரே
தேவனே உம்மைத் துதிப்பேன்
4.குறைவுகள் வந்தபோதும்
குறுகாமல் காத்துக்கொண்டீர்
நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன்