Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று
Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று
நான் உம்முடையவளென்று தினம் சொல்லிடுவேன் நாதா
நீர் என்னுடையவராக இருப்பதால் நன்றியே
நன்றியே நன்றியே நன்றியே நண்பரே
நன்றியே நன்றியே நன்றியே அன்பரே
நன்றியே நன்றியே நன்றியே இயேசுவே
சாரோனின் ரோஜாவாய் இருப்பதால் நன்றியே
பள்ளத்தாக்கின் லீலியாய் மலர்ந்ததால் நன்றியே
என் திராட்சையே ! என் கிச்சிலியே ! உம் கனிகளும் மதுரமே !
என் பிரியமே நீர் என்று என்னை அழைப்பதால் நன்றியே
உன் ரூபவதியாக என்னை நினைப்பதால் நன்றியே
என் இருதயம் கவர்ந்திட்ட என் மணவாளரே!
என்னை விருந்து சாலைக்கு அழைத்துப் போனதால் நன்றியே
என்மேல் பறந்திட்ட உந்தன் கொடியின் நேசமே
என் ஆத்தும நேசரே என் பிரியமே நீர் ஐயா!
உம் இடது கை என் தலைகீழ் இருப்பதால் நன்றியே
உம் வலக்கரம் என்னையும் அணைப்பதால் நன்றியே
என் பிரியமே ! என் ரூபமே !
நம் மஞ்சமும் பசுமையே !
பரலோகத்தின் திறவுகோலை என் கையில் தந்தீரே
பூட்டவும் திறக்கவும் அதிகாரம் தந்தீரே
சர்வலோகத்தின் தேவனே !
என் மணவாளனே!