கரை தாண்டி ஓடும் – Karai Thaandi Oodum

Deal Score0
Deal Score0

கரை தாண்டி ஓடும் – Karai Thaandi Oodum Tamil Christian Trending Melody song lyrics, Tune by fr. Varan Vardhan, Madurai, Vocals – Prageetha Joseph,Chennai. KC Trichy

கரை தாண்டி ஓடும் இந்த வெள்ளம்
கரை தேடா ஓடம் போல செல்லும்
கலையாத உன் நினைவில் நான் வாழ்கையில்
கலைமானைப் போல உன்னை நான் தேடயில்
கறைபடா உன் அன்பு ஒன்றே கதியாகும் எனக்கு என்றே
நினைத்தேன், அழைத்தேன், விழித்தேன், உயிர்த்தேன்!
ஆனந்தமே … (2)

தனியாக நான் வாடினாலும்
துணை ஒன்றை நான் தேடினாலும்
தடுமாறும் ஓடம் போல் நின்று
திசை மாறும் விதி உண்டு இன்று
என் வாழ்வில் ஏதோ மின் தந்தாய் நீயோ
மண்மீது இல்லை வீண் ஒன்றே எல்லை
நீ வந்தாய், உயிர் தந்தாய், எனை வென்றாய்
எனைத் தருவேனோ …
உனக்காய் எனைத் தருவேனோ

வாழ்விற்கு வழி தேடிக் கொண்டு
சாவிற்கு பலியானோர் உண்டு
நான் வாழ பலர் வாழ்வைத் தீண்டும்
நஞ்சான நெஞ்சம் எனில் உண்டு
தீயாக எரிந்தாய், தீமைதனை ஒழித்தாய்
அன்பாட்சி வளர்த்தாய், அருள்வாழ்வில் நிலைத்தாய்
நீ செய்தாய், வழி தந்தாய், எனை வென்றாய்
எனைத் தருவேனோ …
பிறர்க்காய் எனைத் தருவேனோ

கரை தாண்டி ஓடும் song lyrics, Karai Thaandi Oodum song lyrics, Tamil songs

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘கரை தாண்டி ஓடும் – Karai Thaandi Oodum’.
  • The song discusses themes of love, hope, and spiritual guidance.
  • It includes references to life challenges and the search for divine support.
  • Links to other related Christian Tamil songs are provided for further exploration.
  • The song expresses deep emotions and spiritual yearning, resonating with many listeners.
Jeba
      Tamil Christians songs book
      Logo