Adaikalamanavare Aaruthal Alippavarae song lyrics – அடைக்கலமானவரே ஆறுதல்
Adaikalamanavare Aaruthal Alippavarae song lyrics – அடைக்கலமானவரே ஆறுதல்
அ.. ஆ.. இ.. ஈ.. உ.. ஊ.. எ.. ஏ.. ஐ ஒ.. ஓ.. ஒள.. ஒ.. ஓ.. ஒள..
அடைக்கலமானவரே
ஆறுதல் அளிப்பவரே
இயற்கையின் சிருஷ்டிகரே
ஈடிணையில்லாதவரே
உன்னதமானவரே
ஊரெல்லாம் அறிந்தவரே
எளிமையில் பிறந்தவரே
ஏழைகளின் தோழன் நீரே
அடைக்கலமானவரே ……………
அ.. ஆ.. இ.. ஈ.. உ.. ஊ.. எ.. ஏ.. ஐ
ஒ.. ஓ.. ஒள.. ஒ.. ஓ.. ஒள..
ஐக்கியம் தருபவரே சௌக்கியம் தருபவரே
ஒருமைப்பாட்டினை ஓடோடி விதைப்பவரே
ஓளஷதமானவரே ஓளஷதம் தருபவரே
உயிரெழுத்தை போல உயிர்கொடுக்க வந்தவரே
அண்ட சராசரத்தை ஆளுகை செய்கிறவர்
இவ்வுலக மேலுலக ஈருலக அரசனவர்
உயிருள்ள தேவனவர் ஊமைக்கும் தேவனவர்
என்றைக்கும் தேவனவர் ஏக்கங்களை தீர்க்கிறவர்
பாவங்களை வெறுக்கிறவர் பாவியை நேசிக்கிறவர்
மனந்திரும்புங்கள் என்று அழைப்பினை விடுக்கிறவர்
சீக்கிரம் வருகிறவர் தீர்ப்பினை கொடுக்கிறவர்
பாவத்தை ஜெயிப்பவர்க்கு சிங்காசனம் தருகிறவர்
UNMAYIN THIRAVUKOL MINISTRY