உமது பேரன்புகேற்ப – Umathu Peranbukerpa
உமது பேரன்புகேற்ப – Umathu Peranbukerpa, Nal Meippar Geethangal songs. Tamil Christians song. Written, tune by C.vasanthakumar, நல் மேய்ப்பர் கீதங்கள் சி.வசந்தகுமார்.
“என்னை ஜீவபலியாய் ” பாடல் மெட்டில் திருப்பாடல் 51 ஐ வடிவமைத்துத்
தயாரித்தவர் – சி. வசந்தகுமார்.
இசை இயக்கம்
திரு. அப்பாக்குடம் மாணிக்கவாசகம் (Monicks)
பாடல்:
பல்லவி
உமது பேரன்புகேற்ப
எனக்கு இரங்கும் தேவரீர்
அனுபல்லவி
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
எனது குற்றங்களைத் துடைத்தருளும்
சரணங்கள்:
- என் குற்றம் உணர்கின்றேன்;
என் பாவம் கண்முன்னே நிற்கின்றது.
தீவினையோடு என் வாழ்வுத் தொடக்கம்
பாவத்தோடே என்னைக் கருத்தாங்கினாள். - உள்ளத்து உண்மையையே
உன்னதமானவர் விரும்புவது
மெய்ஞானத்தால் என்றென்றும் நீர்
என் மனத்தை நிரப்பியருளும். - தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே
தூயவர் படைத்தருளும்;
உறுதியும் புதுமையுமான ஆவியை
உருவாக்கி எனக்குத் தந்தருளும்
- நொறுங்கிய நெஞ்சமே – (என்)
நேசருக்கேற்ற பலியாகும்;
நொறுங்குண்ட நருங்குண்ட உள்ளத்தை நீர்
அவமதிப்பதில்லை, தள்ளிவிடுவதில்லை. - என்னைத் தள்ளாதேயும்
உம் ஆவியை எடுக்காமலிரும்
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் தந்து தன்னார்வ
மனம் தந்து எனைத் தாங்கியருளும். - என் உதடுகளைத் திறவும் ஆண்டவா,
என் வாய் உம் புகழ் பாடும்
மகிழ்வொலியை நான் கேட்கும்படி செய்யும்; (நீர்)
நொறுக்கிய (என்) எலும்புகள் களிகூரும்
உமது பேரன்புகேற்ப song lyrics, Umathu Peranbukerpa song lyrics
Umathu Peranbukerpa song lyrics in English
Umathu Peranbukerpa
The Band: Song Power Music A. Monicks ASH
Vocal: Sis. Jaya
Keys: Kutty Joy
Violin: Rajagopal
Veena & Flute: Mithun
Guitars: Sam, Monicks & Chris
Rhythm Programming: John Malamari
Indian Percussion: Anish Arul