மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து – Magilnthu Pugalnthu Migapaninthu
பல்லவி
மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து; துதித்து கிறிஸ்தை
வாழ்த்திப் போற்றும்; என் ஆத்துமாவே;
அனுபல்லவி
தகுந்த காலத்தில் கிறிஸ்துன் அகந்தைப் பவம் தீர்த்துனை
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால்,
சரணங்கள்
1.சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு,
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு;
விந்தையாய் மெய்ஞ்ஞானப் பதங்களைப் பாடு;
விண் உலகத்தின் நித்திய வாழ்வினைத்தேடு;
வீரமாய் மறை கூறும் சத்தியமே,
நயமே, ஜெயமே-திவ்விய
சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து,
தேறுவாய், களி கூருவாய் தினம்
2.அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது;
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது;
பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது;
பரிசுத்த நெறி விட்டுப் பிரியல் ஆகாது;
பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே
நண்ணியே, ²உன்னியே-மகா,
விந்தைக் கிறிஸ்தரசன் உம்தன் சிரத்தின் முடி
சந்தோஷமாய்ச் சூட்ட முந்திஓடு, மிக
Magilnthu Pugalnthu Migapaninthu song lyrics in English
Magilnthu Pugalnthu Migapaninthu Thuthithu Kiristhai
Vaalthi Pottrum En Aathumavae
Thaguntha Kaalththil kirsthun Aganthai Pavam Theerthunai
Thamathu Kirubai Samooganthanil Searththathaal
1.Sinthai Magilnthu Saththiya Maarkkaththil Oodu
Dhinam Dhinam Jebaththil Devaviyai Koodu
Vinthaiyaai Meiganna Pathangalai Paadu
Vin Ulagththin Niththiya Vaalvinai Theadu
Veeramaai Marai Koorum Saththiyamae
Nayamae Jeyamae Dhivya
Saaramaai Vegu Thaaramaai paarthu
Thearuvaai Kali Kooruvaai Dhinam
2.Avarai Pin Sentra Pinpaasai Aagathu
Aniththiya Ulagththin Paasam Aagathu
Pavam Migum Mamisai Itchai Aagathu
Parisuththa Neari Vittu Piriyal Aagathu
Panthaya Porulai Sinthaiyil Enniyae
Nanniyae Unniyae Maha
Vinthai Kiristhstharasan Umthan Siraththin Mudi
Santhosamaai Sootta Munthi Oodu Miga