இலக்கை நோக்கி தொடருகிறேன் – LAKKAI NOKKI THODARUKIREAN
இலக்கை நோக்கி தொடருகிறேன்
உம் முகத்தைப் பார்த்து ஒடுகிறேன்
பாரமான யாவையும் தள்ளிவிட்டு ஒடுகிறேன்
இலக்கை நோக்கி தொடருகிறேன்
1. நெருக்கங்கள் மத்தியிலும்
நிந்தைகள் மத்தியிலும்
இழப்புகள் மத்தியிலும்
பாடுகள் மத்தியிலும்
நீர் நியமித்த ஓட்டத்தில் பொறுமையாய் ஓடுவேன்-2
இயேசுவை நோக்கியே
என் இயேசுவை நோக்கியே- இலக்கை
2. கலங்கிடும் வேலைகளில்
மனம் பதறும் நேரங்களில்
புரியா பாதைகளில்
வழி தெரியா காலங்களில்
நீர் நியமித்த ஓட்டத்தில்
விசுவாசமாய் விசுவாசமாய் ஓடுவேன்-2
இயேசுவை நோக்கியே
என் இயேசுவை நோக்கியே- இலக்கை
3. உம் பாத சுவடுகள்
எனதாய் மாறணும்
சிலுவையின் மேன்மைக்காய்
என் சுயமே சாகணும்
நீர் நியமித்த ஓட்டத்தில் துாய்மையாய் ஓடுவேன்-2
இயேசுவை நோக்கியே
என் இயேசுவை நோக்கியே- இலக்கை
4. கால்படும் தேசங்கள்
உமதாய் மாறணும்
என் தேச ஜனமெல்லாம்
நித்தியம் சேரணும்
நீர் நியமித்த ஓட்டத்தில் உண்மையாய் ஓடுவேன்-2
இயேசுவை நோக்கியே
என் இயேசுவை நோக்கியே- இலக்கை