நம்பிக்கை இழக்கும் வேளையில் – Nambikkai Elakkum Vealaiyil
நம்பிக்கை இழக்கும் வேளையில்
நம்பிக்கை நீரே ஆனீரே
துயரங்கள் சூழ்ந்திடும் வேளையில்
துயர் நீக்கும் தூயராய் வருவீரே -2
நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்-2
ஆராதனை-4
என் ஆல்ஃபா ஒமேகா எல்லாமும் நீரே
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்-2
நம்பினோர் தள்ளிடும் வேளையில்
துணையாக நீரும் வருவீரே
பெலவீனம் தாக்கடும் வேளையில்
புதுபெலனை எனக்கும் தருவீரே-2
நீரே என் எல்ஷடாய் சர்வ வல்லவரே
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்
நீரே என் எல்ரோயீ என்னைக்காணும் தேவனும் நீர்
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்
ஆராதனை-4
என் ஆல்ஃபா ஒமேகா எல்லாமும் நீரே
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்-2
துதியும் உமக்கே கனமும் உமக்கே
மகிமை உமக்கே மாட்சிமை உமக்கே
புகழும் உமக்கே உயர்வும் உமக்கே
எல்லாமும் உமக்கே என்றென்றும் உமக்கே-2
என் ஆல்ஃபா ஒமேகா எல்லாமும் நீரே
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்-2