தேவ சித்தம் என்னில் நிறைவேறிட – Deva Siththam Ennil Niraiverida

Deal Score0
Deal Score0

தேவ சித்தம் என்னில் நிறைவேறிட – Deva Siththam Ennil Niraiverida

தேவ சித்தம் என்னில் நிறைவேறிட என்னை ஒப்புவித்தேன்
தேவ சித்தம் நான் செய்திட என்னை அற்பணித்தேன்
நான் பாவிதான் ஆனாலும்.
என்னை தேடி வந்த என் தேவம் நீர்
நான் துரோகிதான் ஆனாலும்
என்னை ஏற்றுக்கொண்டீர் உம்பிள்ளையாக

ஓகோ நன்றி நன்றி நன்றி.
எந்தன் கேடகமே உமக்கு.
ஆஹா நன்றி நன்றி நன்றி.
எந்தன் அடைக்கலமே உமக்கு .

உம்மை மறந்தேன் உம்மை வெறுத்தேன்.
உம்மை விட்டு நான் தூரம் சென்றேன்-2
என்னை மறவாமலும் விலகாமலும்.
என்னை தேடி வந்து நீர் உயர்த்தி வைத்தீர்
என்னை மறவாமலும் விட்டு விலகாமலும்
என்னை தேடி வந்து நீர் உயர்த்தி வைத்தீர் – ஒகோ நன்றி

பெலனிழந்தேன் மனமுடைந்தேன் உதவுவோரில்லாமல் தவித்து நின்றேன்-2
என்னை தேடி வந்தீர்கள் என்
தேவைl கண்டீர்
என்னை கலங்காதே என்று நீர் அணைத்துக் கொண்டீர்
என்னை தேடி வந்தீர் என் தேவை காண்டீர் என்னை
கலங்காதே என்று நீர் அணைத்துக் கொண்டீர்

Jeba
      Tamil Christians songs book
      Logo