உலகின் வாஞ்சையான – Ulagin Vaanchayaana
1.உலகின் வாஞ்சையான
என் ஸ்வாமி யேசுவே,
நான் உம்மை ஏற்றதான
வணக்கத்துடனே
சந்திக்கச் செய்வதென்ன?
நான் தேவரீருக்கு
செலுத்த உமக்கென்ன
பிரியமானது.
2.நான் யாதொரு கதியும்
இல்லாதவனுமாய்;
நிர்பந்தமும் பயமும்
நிறைந்தவனுமாய்
இருந்தபோதன்பாக
நீர் என்னை நோக்கினீர்,
நீரே என் மீட்புக்காக
இவ்வுலகில் வந்தீர்.
3.கட்டுண்டு நான் கிடந்தேன்,
என் கட்டை அவிழ்த்தீர்;
இகழ்ச்சியைச் சுமந்தேன்,
நீர் அதை நீக்கினீர்;
நீர் என்னை மேன்மையாக்கி
என் ஆத்துமத்திலே
இன்ப நிறைவுண்டாக்கி
ரட்சிக்க வந்தீரே.
4.வியாகுலம் அடைந்த
நரரின் கூட்டமே,
இக்கட்டினால் நிறைந்த
நிர்ப்பந்த மாந்தரே,
இதோ! சகாயர் வந்தார்;
கர்த்தர் கெட்டோருக்கு
இரட்சகரைத் தந்தார்
அதால், மகிழ்ந்திரு.
5.பொல்லாதவர்களுக்கு
மா ஆக்கினைகளும்,
நல்லோரின் கூட்டத்துக்கு
அனந்த பூரிப்பும்
முடிவிலே உண்டாக
அந்நாள் வருவாரே;
ஆம், எங்கள் மீட்புக்காக
நீர் வாரும் யேசுவே.
Ulagin Vaanchayaana Lyrics in English
1.Ulagin Vaanchayaana
En Swami Yesuvae
Naan Ummai Yeattrathaana
Vanakkathudanae
Santhikka Seivathenna
Naan Devareerukku
Seluththa Umakkenna
Piriyamaanathu
2.Naan Yathoru Kathiyum
Illaathavanumaai
Nirpanthamum Bayamum
Niranthavanumaai
Iruntha Pothaganbaga
Neer Ennai Nokkineer
Ummai En Meetpukkaaga
Velippaduththineer
3.Kattundu Naan Kidanthean
En Kattai Avilththeer
Egalchiyai Sumanthean
Neer Athai Neekkineer
Neer Ennai Meanmaiyakki
En Aathumaththilae
Inba Niraivundakki
Ratchikka Vantheerae
4.Viyagulam Adaintha
Nararin Koottamae
Ekkattinal Nirantha
Nirpantha Maantharae
Itho Sahaayar Vanthaar
Karththar Kettorukku
Ratchakarai Thanthaar
Aathaal Magilnthiru
5.Pollathavarkalukku
Maa Aakkinaikalum
Nallorin Kottathukku
Anantha Poorippum
Mudivilae Undaaga
Annaal Varuvaarae
Aam Engal Meetpukkaga
Neer Vaarum Yesuvae