ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே – Arparithentrum Agamagizhvene
ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே
ஆனந்தமாய் பாடுவேன்
ஆண்டவர் அடியார்க்கருளிய அளவில்லா
ஆசிகளை நினைந்தே
ஆண்டவர் அடியார்க்கருளிய அளவில்லா
ஆசிகளை நினைந்தே
நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமத்தையே
என் ஆவல் தீர நிதம் பாடிடுவேன்
ஒப்பில்லாத நேசரின் திரு நாமம் அரணே
எப்போதும் தங்கும் புகலிடமே
ஒப்பில்லாத நேசரின் திரு நாமம் அரணே
எப்போதும் தங்கும் புகலிடமே
திகையாதே நான் உன் தேவன் ஏன்றுரைத்தே
திருவாய் மலர்ந்தென்னைத் தேற்றினாரே
திசையறியாது தியங்கையில் பாதையில்
தீபம் என் இயேசுதானே
திசையறியாது தியங்கையில் பாதையில்
தீபம் என் இயேசுதானே
அன்பரின் இன்ப நாமத்தைப் புகழ
ஆயிரம் நாவுகள் போதுமோ
ஆதியும் அந்தமும் ஆச்சரியமே இவர்
நீதியின் சூரியனே
ஆதியும் அந்தமும் ஆச்சரியமே இவர்
நீதியின் சூரியனே
நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமத்தையே
என் ஆவல் தீர நிதம் பாடிடுவேன்
ஒப்பில்லாத நேசரின் திரு நாமம் அரணே
எப்போதும் தங்கும் புகலிடமே
ஒப்பில்லாத நேசரின் திரு நாமம் அரணே
எப்போதும் தங்கும் புகலிடமே