வாலிபனே வாலிபனே கொஞ்சம் – Valibane Valibane

வாலிபனே வாலிபனே கொஞ்சம் – Valibane Valibane

வாலிபனே வாலிபனே கொஞ்சம் நில்லப்பா
நான் சொல்லுறத கொஞ்சம்/ நின்னு கேளப்பா (2)
டண்டனக்கர டண்டனக்கர ஆட்டம் போடாத
உன் வாலிபத்தை வீணாநாசம் ஆக்கிவிடாதே. (2)

1.வாலிப நாட்களில் உன் சிருஷ்டிகரை நினைச்சிடு
பயத்தோடும் பக்தியோடும் அவரை நீயும் துதிச்சிடு (2)
ஒருநாள் கொடுக்கணும் நீ கணக்கு
இயேசுவுக்கு நேரா உன் வாழ்க்கையைத்தான் திருப்பு. (2)

2.உலகத்தை நம்பாத அது ரொம்ப இருட்டு
பொய்யும் புரட்டும் தான் எங்கேயுமே இருக்கு. (2)
சத்திய வேதத்தைத் தான் புரட்டு
வாழ்க்கை மாறிடுமே ரொம்ப ரொம்ப பிரைட்டு. (2)

3.யோசேப்பு போல நீயும் வாழ்க்கையில இருக்கணும்
பாவம் நெருங்கையில நீயும் அத வெறுக்கணும். (2)
வாராரு இயேசு சாமி வேகம்
பரலோகம் போவதற்கு வேணும் ஐயா தாகம்