யாரால் நீர் சிலுவையில் – Yaaraal Neer Siluvaiyil
யாரால் நீர் சிலுவையில் – Yaaraal Neer Siluvaiyil
யாரால் நீர் சிலுவையில் தொங்கினீர்
என்னாலல்லவோ தொங்கினீர் -2
நான் செய்த பாவத்தால் பாவமறியா
உம்மை தொங்க விட்டேனே -2
1. பாவம் செய்தது நானல்லவா
தண்டிக்கப்பட்டது நீரா ஐயா
துன்மார்க்கம் செய்தது நானல்லவா
துன்புறுத்தப்பட்டது நீரா ஐயா
எனக்காய் பலியானீரே என் பாவம் சுமந்தீரே
இயேசய்யா – 2 என்னை மன்னியும் – 6
2. அநியாயம் செய்தது நானல்லவா
அடிக்கப்பட்டது நீரா ஐயா
கொடுமைகள் செய்தது நானல்லவா
கொல்லப்பட்டது நீரா ஐயா
நான் விடுதலையாகவே நீர் சிறைப்பட்டுப்போனீரே
இயேசய்யா – 2 என்னை கழுவிடும் – 2 உம் இரத்தத்தால்
3. அக்கிரமம் செய்ததென் கையல்லவா
ஆணிகள் பாய்ந்தது உம் கையிலா
கறைப்பட்டு போனதென் காலல்லவா
காயங்கள் பட்டது உம் கால்களா
ரத்தம் வழிந்தோடவே முள் முடி உம் சிரசிலா
இயேசய்யா – 2 உம்மைப் போலொரு தெய்வம் இல்லையே – 2
4. பாவம் இனிமேல் செய்யாமல்
பரிசுத்தமாய் இனி வாழ்வேனே
இனி உம்மை நோக செய்யாமல்
உம் விருப்பம் தான் இனி செய்வேனே
எனக்காய் நீர் மரித்தீரே இனி உமக்காய் நான் வாழ்வேனே
இயேசய்யா – 2 நான் செய்வேனே இனி செய்வேனே உம் ஊழியம் – 2
Yaaraal Neer Siluvaiyil song lyrics in english
Yaaraal Neer Siluvaiyil