மனிதனை மீட்க மனிதனாய் வந்தீர் – Manithanai Meetka Manithanaai Vantheer

Deal Score0
Deal Score0

மனிதனை மீட்க மனிதனாய் வந்தீர் – Manithanai Meetka Manithanaai Vantheer

மனிதனை மீட்க மனிதனாய் வந்தீர்
எனக்கான விலையை முழுமையாய் தந்தீர்
நடுசுவரான பகையை கொன்றீர்
சாத்தானை சிலுவையில் சாவால் வென்றீர் 2

என் இடத்தை நீர் எடுத்துக் கொண்டு
உம்மிடமாக என்னை சேர்த்து கொண்டீர் -2
உமக்கு சொந்தமாய் வாங்கி கொண்டிரே -2

CHORUS:
எல்லாமே முடிந்தது -2
என் வாழ்க்கை முழுவதும்
உம் ஒருவர்க்குரியது -2

VERSE 1:
எனக்கெதிரான கையெழுத்தை குலைத்து
சிலுவையின் மேலே ஆணியும் அடித்து
தடையாக இருந்த திரையையும் கிழித்து
உம்மிடம் சேர தைரியம் கொடுத்தது -2

துரைத்தனம் அதிகாரங்கள்
அனைத்தையும் உரிந்துக்கொண்டு -2
சிலுவையின் மேலே வெற்றி சிறந்தீரே -2

CHORUS:
எல்லாமே முடிந்தது -2
இந்த ஒரே வார்த்தையில்
எல்லாமே முடிந்தது -2

BRIDGE:
தொலைந்து போனதை தேடி வந்தீரே
இழந்து போனதை மீட்க வந்தீரே

அருகே வந்தீரே அணைத்து கொண்டீரே
அழகுப்படுத்தி என்னை வாழ வைத்தீரே

உம் ஜீவன் தந்து என்னை மீட்டு கொண்டிட
முடிவு செய்தீரே முடித்து விட்டீரே

எனக்காக யாவுமே செய்து முடித்தீரே
நீர் முடித்ததிலிருந்து தான்
என் வாழ்க்கை துடங்குதே

CHORUS:
எல்லாமே முடிந்தது -2
இந்த வார்த்தையில் இருந்துத்தான்
என் வாழ்க்கை துவங்குது (துடங்குது)

எல்லாமே முடிந்தது -2
என் வியாதிக்கு நேரம் இன்றொடு முடிந்தது

எல்லாமே முடிந்தது உம் கிருபை கிடைத்தது
என் பாவத்திலிருந்து
என்னை மீட்டு கொண்டது

எல்லாமே முடிந்தது -2
உம் தரித்திரதாலே என் தரித்திரம் முடிந்தது

எல்லாமே முடிந்தது -2
என் வாழ்க்கை முழுவதும்
உம் ஒருவர்க்குரியது

ELLAMAE MUDINDHADHU song lyrrics in English

IT IS FINISHED !!!!!

Jeba
      Tamil Christians songs book
      Logo