மண்ணகம் வந்த மாணிக்கமே – Mannagam Vantha Manikame

Deal Score0
Deal Score0

மண்ணகம் வந்த மாணிக்கமே – Mannagam Vantha Manikame

மண்ணகம் வந்த மாணிக்கமே
ஏற்பீர் எந்தன் காணிக்கையை
மண்ணகம் வந்த மாணிக்கமே
ஏற்பீர் எந்தன் காணிக்கையை

உம்மிடம் பெற்ற வரங்களையே
அளித்தோம் உந்தன் கரங்களிலே
அளித்தோம் உந்தன் கரங்களிலே

விண்ணும் மண்ணும் படைத்தவரே
உந்தன் அன்பு வானாகும்
மண்ணிலே வந்த மனுமகனே
எதை நான் தந்தால் ஈடாகும்

விண்ணும் மண்ணும் படைத்தவரே
உந்தன் அன்பு வானாகும்
மண்ணிலே வந்த மனுமகனே
எதை நான் தந்தால் ஈடாகும்

மண்ணகம் வந்த மாணிக்கமே
ஏற்பீர் எந்தன் காணிக்கையை

அகம்தனைப் பார்த்து ஆபேல் தந்த
காணிக்கை ஏற்றீர் இறைமகனே
ஆ… மனம்தனைப் பார்த்து விதவையின் காசை
அன்புடன் ஏற்றீர் ஆண்டவரே

எளியவர் நாங்கள் தருகின்ற எங்கள்
காணிக்கை ஏற்பீர் மனுமகனே
திருவடிதனிலே இதயம்தன்னை
காணிக்கை தந்தோம் விண்ணவனே

விண்ணும் மண்ணும் படைத்தவரே
உந்தன் அன்பு வானாகும்
மண்ணிலே வந்த மனுமகனே
எதை நான் தந்தால் ஈடாகும்

மண்ணகம் வந்த மாணிக்கமே
ஏற்பீர் எந்தன் காணிக்கையை

பகையினை மனதில் நிறைக்கின்ற மனிதர்
தருகின்ற காணிக்கை ஏற்பதில்லை
உறவுகள் இடையில் பிரிவுகள் இருந்தால்
படைக்கின்ற காணிக்கை பயனுமில்லை

உயிரெனும் மகனை பலியிட வந்த
ஆபிரகாம்போல் எவருமில்லை
முழுமையும் இறையின் கரங்களில் இன்றே
காணிக்கை தந்தால் அழிவதில்லை

விண்ணும் மண்ணும் படைத்தவரே
உந்தன் அன்பு வானாகும்
மண்ணிலே வந்த மனுமகனே
எதை நான் தந்தால் ஈடாகும்

மண்ணகம் வந்த மாணிக்கமே
ஏற்பீர் எந்தன் காணிக்கையை

உம்மிடம் பெற்ற வரங்களையே
அளித்தோம் உந்தன் கரங்களிலே
அளித்தோம் உந்தன் கரங்களிலே

விண்ணும் மண்ணும் படைத்தவரே
உந்தன் அன்பு வானாகும்
மண்ணிலே வந்த மனுமகனே
எதை நான் தந்தால் ஈடாகும்

விண்ணும் மண்ணும் படைத்தவரே
உந்தன் அன்பு வானாகும்
மண்ணிலே வந்த மனுமகனே
எதை நான் தந்தால் ஈடாகும்

மண்ணகம் வந்த மாணிக்கமே
ஏற்பீர் எந்தன் காணிக்கையை

Jeba
      Tamil Christians songs book
      Logo