புத்தியாய் நடந்து வாருங்கள் – Puththiyaai Nadanthu Vaarungal

புத்தியாய் நடந்து வாருங்கள் – Puththiyaai Nadanthu Vaarungal

புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்

அனுபல்லவி

சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி

சரணங்கள்

1.ஒன்றான பிதாவின் மக்களே;- கிறிஸ்தின் ரத்தத்
தொன்றுடன் சகோதரர்களே,
குன்றாத சுதந்திரர்களே, நீங்கள் எல்லாரும்
‘கோதில்லாத நீதிமான்களே;
சண்டாளப் பசாசின் மக்கள் தங்களைப் போல்வாது பண்ணிக்
கொண்டு திண்டு முண்டு செய்தால், கூற என்ன நீதி உண்டு -புத்தி

2.அன்பு கூர்ந்திருக்கச் சொன்னாரே;- கிறிஸ்து நமை
ஐக்கியமாய்ப் போகச் சொன்னாரே;
இன்பமாய் நடக்கச் சொன்னாரே;?ஆவியில் ஒன்றாய்
இசைவாகப் பேசச் சொன்னாரே;
பண்பிலா மிருகம் போலும், பாயும் பேயின் மக்கள் போலும்,
துன்பம், பொய்கள், ‘வன்மம், பகை, தூஷணம் செய்யாமல் நல்ல -புத்

3.ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்
சீருடை தெய்வப் பிள்ளைகள்-நீங்கள்; எதிந்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த்திருமறை குறித்துச்சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே

4.ஆவியை அடக்காதிருங்கள்;- நான் சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்!
ஜீவனை அடையத் தேடுங்கள்-யேசு கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்;
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்து, தளரா நடையோடுன்னிப்

5.ஜாதி பேதம் சொல்வர் அல்லவோ?- கிறிஸ்தவர்கள்
தாமே தெய்வ ஜாதி அல்லவோ?
நீதி பரிசுத்தர் அல்லவோ?-மகிமையுள
நேசம் மிகு ராஜர் அல்லவோ?
வேதனை உண்டாக்கும் ஜாதி வேற்றுமையை விட்டு மறை
‘ஓதியபடி எல்லாரும் உத்தமக் கிறிஸ்தோராகப்

6. பொக்கிஷத்தை எங்கே வைத்தீர்கள்?- பரத்தில் வைத்தால்
பூரண பலன் அடைவீர்கள்;
கக்கிச வழியே செல்வீர்கள்;- கடைசியிலே
கண்டு ஜீவனை அடைவீர்கள்;
முக்கியமாய் எதைத்தேட முன்னவன் சொன்ன சொற்படி,
மெய்க்கிறிஸ் திருப்பிடத்தின் மேலானதை நாடித்தேடிப் புத்தி

Puththiyaai Nadanthu Vaarungal Lyrics in English

Puththiyaai Nadanthu Vaarungal Thiruvasana
Poottai Thiranthu Paarungal

Saththiyaththai Pattri Kondu
Thannai Suththi Pannikondu
Niththamum Jebam Tharumam
Neethi Seithu Paadikondu

1.ontrana Pithavin Makkalae Kiristhin Raththa
Thontrudan Sakothargalae
Kuntratha Suthanthirargalae Neengal Ellarum
Kothilla Neethimaangalae
Sandaala Pasaasin Makkal Thangalai Poalvaathu Panni
Kondu Thinamaum Mundu Seithaal Koora Enna Neethi Undu

2.Anbu Koorthirukka Sonnarae Kiristhu Namai
Aikkiyamaai Poga Sonnarae
Inbamaai nadakka Sonnarae Aaviyil Ontraai
Isaivaaga Peasa Sonnarae
Panpila Mirugam Polaum Paayum Peayin Makkal Polum
Thunbam Poigal Vanmam Pagai Thooshanam Seiyaamal nalla

3.Aaroodaiya Pillaigal Neengal Thiru Uraivyil
Arinthu Unarnthu Paarungal
Seerudai Deiva Pillaigal Neengal Ethintha
Thitharippu Seiyum Vagaigal
Koorudan Meithirumarai Kurithu Solvathai Thinam
Nearudan Aaraainthu Paarthu Niththiya Oliyil Thannae

4.Aaviyai Adakkathirungal Naan Solluvathai
Asattai Seiyamal Paarungal
Jeevanai Adaiya Theadungal Yesu Kiristhin
Sinthaiyai Tharithu Kollungal
Meaviyae Jebam Mantrattu Vinnappam Venduthalodu
Thaavi yeasuvai Pidithu Thalaraa Nadaiyodunni

5.Jaathi Peatham Solvar Allavo Kiristhavrgal
Thamae Deiva jaathi Allavo
Neethi Parisuththar Allavo Magiyula
Neasam Migu Raajar Allavo
Vedhanai Undakkum Jaathi Veattrumaiyai Vittu Marai
Oothiyapadi Ellarum Uththam Kiristhoraaga

6.Pokkishaththai Engae Vaitheergal Paraththil Vaithaal
Poorana Balan Adaiveergal
Kakkisa Vazhiyae Selveergal Kadaisiyilae
Kandu Jeevanai Adaiveergal
Mukkiyamaai Ethaitheada Munnavan Sonna Sorpadi
Meikiris thiruppeedaththin Melanathai Naadi theadi Puththi