பாடுவாய் என் நாவே – Paaduvaai En Naavae

Deal Score+1
Deal Score+1

பாடுவாய் என் நாவே – Paaduvaai En Naavae

பாடுவாய் என் நாவே
மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த
வயிற்றுதித்த கனியவர்தம்
பூதலத்தை மீட்கச் சிந்தும்
விலைமதிப்பில்லா துயர்ந்த
தேவ இரத்த இரகசியத்தை
என்றன் நாவே பாடுவாயே

1. அவர் நமக்காய் அளிக்கப்படவே
மாசில்லாத கன்னி நின்று
நமக்கு என்றே பிறக்கலானார்
அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான
வித்ததனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே
வியக்கும் முறையில் முடிக்கலானார்

2. இறுதி உணவை அருந்த இரவில்
சகோதரர்கள் யாவரோடும்
அவரமர்ந்து நியமனத்தின்
உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்
பன்னிரண்டு சீடருக்கு
தம்மைத் தாமே திவ்ய உணவாய்
தம் கையாலே அருளினாரே

3. ஊன் உருவான வார்த்தையானவர்
வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் சரீரம் ஆக்கினாரே
இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை
முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதி கொள்ள
மெய்விசுவாசம் ஒன்றே போதும்

4. மாண்புயர் இந்த அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதர் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக

5. பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவி யானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாக – ஆமென்

Paaduvaai En Naavae song lyrics in english

Paaduvaai En Naavae

    Jeba
        Tamil Christians songs book
        Logo