பரம சேனைக்கும் – Parama Seanaikkum Lyrics

பரம சேனைக்கும் – Parama Seanaikkum Lyrics

1.பரம சேனைக்கும்
பூலோகத்தாருக்கும்
ஆண்டவரே,
அன்பு நிறைந்தவர்,
இரக்கமுள்ளவர்
கிருபை செய்பவர்
தேவரீரே.

2.உம் மகிமைக்கென்றே
இவ்வாலயத்தையே
காணிக்கையாய்
படைக்கக் கூடினோம்,
அர்ப்பணம் செய்கிறோம்,
கொண்டாடி நிற்கிறோம்,
ஆனந்தமாய்.

3.உயர்ந்த வானமும்
விசால பூமியும்
நிறைக்கும் நீர்
தயவைக் காண்பிக்க,
சபையைக் சந்திக்க,
இங்கே ஒளி வீச ,
வந்தருள்வீர்.

4.ஆயர்கள் ஜனங்கள்
செலுத்தும் ஜெபங்கள்
மா தயவாய்
இங்கே கேட்டருளும்,
கிருபை காண்பியும்,
கெட்டோரை ரட்சியும்,
வல்லமையாய்.

5.அப்போது இங்கேயும்
பின் மோட்ச வீட்டிலும்
உமக்கென்றே
கனமுந் துதியும்
அன்புடன் நன்றியும்
என்றென்றும் எழும்பும்,
ஆண்டவர்க்கே.

Parama Seanaikkum Lyrics in English

1.Parama Seanaikkum
Poologaththaarukkum
Aandavarae
Anbu Nirainthavar
Irakkamullavar
Kirubai Seibavar
Devareerae

2.Um Magimaikkentrae
Evvalayaththaiyae
Kaanikkaiyaai
Padaikka Koodinom
Arppanam Seikirom
Kondadi Nirkirom
Aananthamaai

3.Uyarntha Vaanamum
Visaala Boomiyum
Nirakkum Neer
Thayavai Kaanbikka
Sabaiyai Santhikka
Ingae Ozhi Veesa
Vantharulveer

4.Aayargal Janangal
Seluththum Jebangal
Maa Thayavaai
Ingae Keattarulum
Kirubai Kaanbiyum
Kettorai Ratchiyum
Vallamaiyaai

5.Appothu Ingeayum
Pin Motcha Veettilim
Umakkentrae
Kanam Pugalchiyum
Anbudan Nantriyum
Entrentum Elumbum
Aandavarkkae.