தோற்பதில்லை தோற்பதில்லை – THORPATHILLAI THORPATHILLAI
தோற்பதில்லை தோற்பதில்லை
தோல்விகளை மனம் ஏற்பதில்லை-2
அனு பல்லவி
நான் ஜெயிக்கப் பிறந்தவன்
ஜெபிக்க தெரிந்தவன் ஜெயகிறிஸ்து இயேசுவோடு நடக்கிறவன்-2
1.பெலிஸ்தியரோடு போரிடும் போது சிம்சோன் தோற்பதில்லை-2
அந்த கோலியாத்தோடு மோதுர போதும் தாவீது தோற்பதில்லை-2
2.ஆவியும் மாம்சமும் போரிடும் போது ஆவி தோற்பதில்லை-2
இந்த உலகமும் சபையும் உரசரபோது
திருச்சபை தோற்பதில்லை-2
3.ஆயிரம் பேர் எந்தன் இடப்பக்கம் விழுந்தாலும் என் ஜனம் தோற்பதில்லை-2
இந்த உலகமே எழுந்து எதிர்த்து நின்றாலும் நான் என்றும் தோற்பதில்லை-2