தெய்வ அன்புதான் – Deiva Anbuthaan
பல்லவி
தெய்வ அன்புதான், தெய்வ
அன்புதான்,
அதனின் அகலம் உயரம்
ஆழம் அளவில்லாததே!
சரணங்கள்
1.பாவக் குழியில் விழுந்துபோன
என்னைத் தூக்கினார்.
பாட்டை நல்கி பாதங்கள்
கன்மலையில் நிறுத்தினார். – தெய்வ
2.கல்வாரி சிலுவையில் தம்
ஜீவனை விட்டார்
கெட்டுப் போன பாவி என்னை
முற்றுமே மீட்டார். – தெய்வ
3.இந்த அன்புக் கீடு நல்க நான்
தகாதவன்
எந்தனைத் தம் சொந்தமாக
தத்தம் செய்கிறேன். – தெய்வ
4.சுகமும் செல்வம் தேகம் ஜீவன்
யாவுமே என்றும்
சுகந்த பலியாய் படைக்கிறேன்
என் இயேசு பாதத்தில். – தெய்வ
5.மீட்கப்பட்ட கூட்டமே நல்
மீட்பர் பேரிலே
பாடி வாழ்த்தல் செய்யுங்கள்
இவ்வன்பைப் போற்றுங்கள். – தெய்வ