குருசினில் தொங்கினீர் – Kurusinil Thongineer

Deal Score0
Deal Score0

குருசினில் தொங்கினீர் – Kurusinil Thongineer

குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்
குரு இயேசு நாதா நீர் கொல்கதாவில்
குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்
குரு இயேசு நாதா நீர் கொல்கதாவில்

கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்த
கண்கள் அயர்ந்த தாகத்தால் தொய்ந்த
ஏனோ இத்தனைப்‌ பாடுகள் ஏற்றீர்
என் பாவம் போக்கிட வந்ததாலோ
என் பாவம் போக்கிட வந்ததாலோ

தலை சாய்க்க உலகில் தலமில்லையென்று
திருவாய் மலர்ந்த தேவக்குமாரா
சிலுவைதான் உமக்கு தலை சாய்த்த இடமோ
பலியாகி மீட்டிட வந்ததாலோ
பலியாகி மீட்டிட வந்ததாலோ

நிலையில்லா பொன் வெள்ளி இவையாவினாலல்ல
விலையேறப்பெற்ற உதிரத்தால் மீட்ட
விலையேறும்‌ சீயோனின்‌ சுடராக நீரே
அலைந்தோரை அணைத்திட வந்ததாலோ
அலைந்தோரை அணைத்திட வந்ததாலோ

குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்
குரு இயேசு நாதா நீர் கொல்கதாவில்
குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்
குரு இயேசு நாதா நீர் கொல்கதாவில்

Jeba
      Tamil Christians songs book
      Logo