கல்வாரியே கல்வாரியே – Kalvariye Kalvariye

Deal Score+2
Deal Score+2

கல்வாரியே கல்வாரியே – Kalvariye Kalvariye

கல்வாரியே கல்வாரியே
கறையில்லா உம் வாழ்வு கண்மூடியே
விடைகாண வந்தோம் விடி வெள்ளியானோம்
இன்னும் இருள் தான் பூமி எங்கும்
படைசூழ கடல் வந்து காற்றில் மோதும்
உடைந்தாலும் கண்ணாடி பிம்பம் காட்டும்

இறைவா இறைவா உம் இதயம் வரவா
வானை கொண்டு வந்து பூமியில் நடவா
கல்வாரியே…கல்வாரியே

கரை காணா பேரின்பமே கதிர் உந்தன் ஒளி பிம்பமே
மண்மூடும் வாழ்வானது கண் மூட வரும் சொர்க்கமே
விடிகாலை வரவே இருளை துரத்து
பொருள் கொண்டுதந்தாலும் புறம் தட்டி நிறுத்து
நதியெல்லாம் கடலோடு நானுந்தன் மடியோடு
மலைஏற மலைஏற மூச்சாய் இரைத்தேன்
இதுதானே என்பாடு இறைவனின் ஏற்பாடு
எப்பாடு இனி மேலும் நான் படவே
வாழ்வாங்கு வாழவரம் தருவாயா
வானை வளைக்க வரம் தருவாயா
நெஞ்சுரம் தருவாயா

இறைவா இறைவா உம் இதயம் வரவா
வானை கொண்டு வந்து பூமியில் நடவா
கல்வாரியே…கல்வாரியே

வாழ்வோடு போராட்டமா வானம்தான்கைக்கெட்டுமா
வழிமாறி நீ செல்வதால் விழி நீரில் உப்பு தப்புமா
தடைபட்ட வாழ்க்கை இனி உடைப்பட்டு போகும்
கவலை கார்மேகம் போல் மழையாய் பொழியும்
வடிகாலாய் பாயட்டும் வெள்ளம் இதனால்
விழிக்குள் இருக்கும் உன் வாழ்வை துவக்கு
தூரத்தில் தெரியுதா அதுவே மின் விளக்கு
கலங்கரை விளக்கு கண் முன் இருக்கு
எரிந்திட நீயும் திரியை முறுக்கு
நன்றெது தீதெது அதை நீ விளக்கு
வாழ்வு உனக்குள்ளே இருக்கு

இறைவா இறைவா உம் இதயம் வரவா
வானை கொண்டு வந்து பூமியில் நடவா
கல்வாரியே…கல்வாரியே

Kalvariye Kalvariye song lyrics in english

Kalvariye Kalvariye

Jeba
      Tamil Christians songs book
      Logo