கனத்திற்கும் மதிப்பிற்கும் – Isa Nabi – ஈசா நபி

கனத்திற்கும் மதிப்பிற்கும் – Isa Nabi – ஈசா நபி

கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி
அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி – 2

அவர் ஆதியும் அந்தமானவர்
இப்ராகிமால் போற்றப்பட்டவர்
அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம
ஆபிரகாமால் போற்றப்பட்டவர்

இஸ்மவேல் ஈசாக்கின் தேவன் – அவர்
ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன் – 2
அன்பு உள்ளம் கொண்டவர்
நல்ல உள்ளம் படைத்தவர் – 2
உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி
உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி

சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி
நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி – 2
வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி – 2
ஊனாகி உயிரான தேவன் நம்
தோல் ஆகி ஆள வந்த ராஜன்