ஒரு நாளும் என்னை கைவிடாமல் – Oru Naalum Ennai Kaividamal
ஒரு நாளும் என்னை கைவிடாமல்
பாதுகாத்தவரே ஸ்தோத்திரம்
ஒரு நாளும் விட்டு விலகாமல்
என்னை கரம் பிடித்து
நடத்தினவரே ஸ்தோத்திரம் -2
அப்பா என்னோடு இருப்பதாலே
ஒன்றையும் குறித்து நான் கலங்கிட மாட்டேன் (இயேசு அப்பா )
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா-2
1. முச்செடியில் நான் சிக்கினேனே உம் கண்கள்
என்னை பார்த்ததாலே பிழைத்தேனே -2
என்னை தூக்கி எடுத்து என் காயங்கள் கட்டி
தோளின் மீது சுமந்து என்னை சேர்த்துக் கொண்டீரே – 2
உம் மந்தையில் என்னை சேர்த்துக் கொண்டீரே -2
(அப்பா என்னோடு)
2. தனிமையிலே நான் அழுத போது
என் கண்ணீர் துடைத்து உம் மார்பில்
சேர்த்துக் கொண்டீரே
தனிமையிலே நான் புலம்பின போது
என் கண்ணீர் துடைத்து உம் மார்பினில்
அனைத்து கொண்டீரே
அழாதே என்று நீ சொல்லி
உம் அரவணைப்பால் என்னை மகிழ செய்தீரே-2
என் கண்ணீர் யாவும் துடைத்தீரே
என் அழுகையை மாற்றினீரே-2
(ஒரு நாளும்)
Appa Ennodu | Rev. Timothy George, Shyni Timothy, & Family | Official Video | Tamil Christian Songs