என் சொத்து நீ என் ஐஸ்வரியம் – EN SOTHU NEE EN AISWARIYAM
என் சொத்து நீ ,என் ஐஸ்வரியம் நீ
விலைமதியா பொக்கிஷம் நீ-2
உயிரையேக் கொடுத்து மீட்டு எடுத்த
விசேஷ என் மகள் நீயல்லவோ-2
1.என் கைகளாலே உன்னை வனைந்தேன்
என் ஜீவசுவாசம் உனக்குள் வைத்தேன்
எத்தனை முறையோ மன்னித்து அனைத்தேன்
ஆனாலும் ஏனோ எனை மறந்தாயோ
மேலான என் அன்பை உணராயோ-2
என் சொத்து நீ ,என் ஐஸ்வரியம் நீ
விலைமதியா பொக்கிஷம் நீ-2
உயிரையேக் கொடுத்து மீட்டு எடுத்த
விசேஷ என் மகள் நீயல்லவோ-2
2. என்னிமைக்குள் வாழும் கண்மணிநீயே
யார் தொடக்கூடும் என் கண்மணியை
செட்டைகளால் உன்னை அனுதினம் மூடி
உறங்காமல் காத்தேன் இராப்பகலாய்
உயர்ந்த என் அடைக்கலம் புரியலையோ-2
என் சொத்து நீ ,என் ஐஸ்வரியம் நீ
விலைமதியா பொக்கிஷம் நீ-2
உயிரையேக் கொடுத்து மீட்டு எடுத்த
விசேஷ என் மகள் நீயல்லவோ-2
3. எனக்கென்று உன்னை அபிஷேகம் செய்தேன்
பகிரிந்தேனே உன்னுடன் தேவரகசியம்
பயிற்றுவித்தனே உழிய பாதையில்
பரலோகம் மகிழ்ந்தது உன்னுடன் அறுப்பில்
உன்னிலே நானே மகிமைபட்டேனே-2
என் சொத்து நீ ,என் ஐஸ்வரியம் நீ
விலைமதியா பொக்கிஷம் நீ-2
உயிரையேக் கொடுத்து மீட்டு எடுத்த
விசேஷ என் மகள் நீயல்லவோ-2