என் கால் சறுக்கும் – En Kaal Sarukkum Pothellaam
என் கால் சறுக்கும் போதெல்லாம்
உம் கிருபை என்னை தாங்குகின்றதே
என்னை புட மிட்டீர் ஆனாலும் வெள்ளியைப் போல் அல்ல
உபத்திரவத்தின் குகையிலே என்னை தெரிந்து கொண்டீர்
1. என் முன்னே நடக்கும் தேவன்
என்னை என்றும் நடத்துவார்
கோணலானவைகளைச் செவ்வையாக மாற்றுவார்
2. உமது கண்ணின் மணி போல
என்னை என்றும் காத்துக் கொள்ளும்
உம் சிறகின் நிழல் தனிலே என்னை மூடிக்கொள்ளும்
3. உன்னை என்றும் கைவிடமாட்டார்
உன்னை விட்டு விலகிடார்
நீகலங்காமல் அமர்ந்திடு அவர் உன்னோடு கூட இருப்பார்