என்னை விட்டு விலகாத – Ennai Vittu Vilagatha Kirubai
என்னை விட்டு விலகாத கிருபை
எனக்காக உயிர் தந்த கிருபை
விண்ணை விட்டு மண்ணில் வந்த கிருபை – 2
அந்த விண்ணில் என்னை கொண்டு சேர்க்கும் கிருபை – 2
கிருபை கிருபை கிருபை இயேசுவின் கிருபை
கிருபை கிருபை கிருபை மாறாத கிருபை – 2
1. அதிகாலை அளித்திடும் உங்க கிருபை
அதிசயம் ஈந்திடும் தேவகிருபை
பெரிதாக விளங்கிடும் உங்க கிருபை – 2
எந்தன் ஜீவனை மீட்டது தேவ கிருபை – 2 – கிருபை கிருபை
2. தாழ்மையுள்ள மனிதர்க்கு தரும் கிருபை
தயவுடன் இரங்குவேன் என்ற கிருபை
தாவீதுக்கு அருளின உண்மை கிருபை – 2
என்றும் விலகாத உடன்படிக்கை செய்த கிருபை – 2 – கிருபை கிருபை
3. நிர்மூலமே ஆகாமல் காத்த கிருபை
முடிவில்லா இரக்கங்கள் தந்த கிருபை
சஞ்சலமே வந்தாலும் சார்வேன் கிருபை – 2(என்றும்)
கைவிடாமல் இரங்குமே கர்த்தர் கிருபை – 2 – கிருபை கிருபை
4. மோசேக்கு கிடைத்த உம் கண்ணின் கிருபை
கர்த்தர் இரக்கமும் தயவுடன் தந்த கிருபை
யோசேப்புக் அளித்தது உங்க கிருபை – 2
சிறைச்சாலையிலும் தயவீந்த தேவ கிருபை – 2 – கிருபை கிருபை
5. ஆலயத்தில் நுழைந்தேனே உங்க கிருபை
எங்க பாளையத்த காத்ததும் உங்க கிருபை
இரட்சிப்பதை அளித்ததும் பெரும் கிருபை – 2
எங்க பாதை எல்லாம் சத்தியமும் தேவ கிருபை – 2 – கிருபை கிருபை
6. வானம் பூமி உயர்வுக்கு நின்ற கிருபை
வல்லவர் மேல் பயம் கொண்டால் வரும் கிருபை
நீதி செய்து நிலை நிற்கும் கர்த்தர் கிருபை – 2
நீதிமான்கள் சந்ததிக்கு வந்த கிருபை – 2 – கிருபை கிருபை
7. குற்றமில்லாத பழி நீக்கும் கிருபை
மீட்டுக் கொண்டீர் இஸ்ரவேலை உங்க கிருபை
இரத்தம் சிந்தி மீட்டது உங்க கிருபை – 2
உங்க கட்டளைகள் காத்திட நீங்கும் சிறுமை – 2 – கிருபை கிருபை
8. செட்டைகளின் நிழலிலே சூழும் கிருபை
செம்மையான இதயத்தோர் காணும் கிருபை
சத்தியத்தை இரட்சிப்பையும் சொல்லும் கிருபை – 2
பெரும் சபைதனில் அறிவிக்கச் செய்யும் கிருபை – 2
கிருபை கிருபை கிருபை இயேசுவின் கிருபை
கிருபை கிருபை கிருபை மாறாத கிருபை
கிருபை கிருபை கிருபை தேவனின் கிருபை
கிருபை கிருபை கிருபை இயேசுவின் கிருபை