என்னை நடந்திடுமே ஆவியானவரே – ENNAI NADATHIDUMAE
என்னை நடந்திடுமே ஆவியானவரே-(2)
நான் அல்லவே என்னில் நீர் வாழ்கிறீர்
எனதல்லவே என்றும் உமதாகட்டும் -(2) – என்னை நடத்திடுமே
1) தடம்பதித்து நீர் முன்னே செல்லும்
உம் வழித்தடம் அதை நான் வாஞ்சிக்கிறேன்
இடைமறித்து எனை நீர் நிறுத்தும்
உம் இடைஞ்சல்கள் இனிமையே ஏங்குகிறேன் – நான் அல்லவே
2) தரம்பிரித்து எனை நீர் அழைத்தால்
எந்த தரத்திலும் நான் இங்கு இருப்பதில்லை
விரல் பிடித்து எனை நடத்தி வந்தால்
எந்த நிலையிலும் நான் இங்கு விழுவதில்லை – நான் அல்லவே