எந்தன் மீது அன்பு வைத்தீர் – Endhan Meedhu Anbu Vaitheer

Deal Score0
Deal Score0

எந்தன் மீது அன்பு வைத்தீர் – Endhan Meedhu Anbu Vaitheer

எந்தன் மீது அன்பு வைத்தீர்
எனக்காக இரத்தம் சிந்தி
என்னையும் இரட்சித்தீரே என் இயேசுவே -(2)

என் ஜீவனே உம்மை நான் ஆராதிப்பேன்
என் ஜீவனே உம்மை நான் உயர்த்திடுவேன் (2)

1.காட்டு புஷ்பத்தையெல்லாம் வளர்த்த தெய்வம் நீரே
வறண்ட வனாந்திரத்தை செழிப்பாக்குவீர் (2)

உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே
என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே (2)

2.சிறியவனை சிறுமையிலிருந்து எடுத்த தெய்வம் நீரே
சிங்காசனம் தந்து நீர் அழகு பார்ப்பீர் (2)

உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே
என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே (2)

3.நெருப்புத் தழலை எடுத்துவந்து என் நாவில் வையும் அய்யா
பலிபீட அக்கினியாய் எரிய வேண்டுமே (2)

உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே
என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே (2)

Jeba
      Tamil Christians songs book
      Logo