எந்தன் தகப்பனும் நீர்தானையா – EN VAZHVIN AADHARAMAE
எந்தன் தகப்பனும் நீர்தானையா
எந்தன் தாயும் நீர்தானையா 2
எந்தன் அடைக்கலமே
எந்தன் மறைவிடமே
என்றும் என் வாழ்வின் ஆதாரமே 2
எந்தன் வாழ்வை மாற்ற வந்த பரிசுத்தரே
எனக்காக சிலுவையை சுமந்தவரே 2
எந்தன் தகப்பனும் நீர்தானையா
எந்தன் தாயும் நீர்தானையா 2
எந்தன் அடைக்கலமே 2
துரத்துண்ட பறவை போல் அலைந்தேன் ஐயா
என்னைக் காக்கும் தூதராக வந்தவரே 2
எந்தன் வாழ்க்கையும் நீர்தானையா
எந்தன் வாஞ்சையும் நீர்தானையா 2
எந்தன் அடைக்கலமே 2
கண்ணிமைக்கும் நேரத்திலே விழுந்தேன் ஐயா
காக்கும் கரம் கொண்டு என்னை அனைத்தவரே 2
உந்தன் உள்ளங்கையில் வரைந்திரையா
எந்தன் உயிரே நீர்தானையா 2
எந்தன் அடைக்கலமே 2