உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankaiyil Varainthavarae

Deal Score0
Deal Score0

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankaiyil Varainthavarae

உள்ளங்கையில் வரைந்தவரே
உள்ளமெல்லாம் கவர்ந்தவரே
உமக்கே ஸ்தோத்திரமையா இயேசைய்யா
உமக்கே ஸ்தோத்திரமையா

என் கண்ணீர் கண்டவரே
கன்மலை மேல் நிறுத்தினீரே
காயங்களை கட்டினீரையா இயேசைய்யா
காயங்களை கட்டினீரையா

எல்லாரும் கைவிட்டாலும்
நான் உன்னை விட மாட்டேன்
என்று சொல்லி நடத்துகின்ரே இயேசைய்யா
என்று சொல்லி நடத்துகின்ரே

யார் என்னை வெறுத்தாலும்
நீர் என்னை வெறுக்காமல்
என் மேலே அன்பு வைத்தீரே
என் மேலே பாசம் வைத்தீரே

வாசல்கள் அடைத்தாலும்
புதுவாசல் திறந்து என்னை
ஆசீர்வதிக்கின்ற தெய்வமே இயேசைய்யா
ஆசீர்வதிக்கின்ற தெய்வமே

Jeba
      Tamil Christians songs book
      Logo