உம்மையன்றி வேறே – Ummaiyandri Vearae

உம்மையன்றி வேறே – Ummaiyandri Vearae

உம்மை அன்றி வேறே ஒர்நாமம்
பூவுலகில் இல்லையே
உம்மைப் போல இரட்சிக்கும் மேல்நாமம்
வானத்தின் கீழ் இல்லையே (2)

ஆதியிலே தேவனோடு
வார்த்தையாக இருந்தவரே
அகிலமும் படைத்தவரே
அனைத்தும் உந்தன் பாதம்கீழே

இயேசு உம்நாமம் கிறிஸ்தேசுவின் நாமம்
அபிஷேகித்தர் நாமம் அகிலத்தை மீட்கும் உம்நாமம்

1. மரணத்தை ஜெயித்தவர்
மரித்து பின் எழுந்தவர்
உலகத்தை உயிர்ப்பவர்
உன்னதத்தில் உயர்ந்தவர்
சிலுவைக்குச் சென்றவர் சிறுமையை கண்டவர்
சிறியவர் எமை மீட்க குருதியும் தந்தவர்

2. கிருபையை பொழிந்தவர்
சத்தியத்தில் நிறைந்தவர்
நமக்குள்ளே வசிப்பவர்
மகிமையின் மகன்அவர்
உலகத்தின் பாவத்தை
சுமந்தவர் தீர்த்தவர்
உந்தன் எந்தன் சாபங்களை
சிரமதில் ஏற்றவர்

3. சோதனையை ஜெயித்தவர்
சோதனையில் மீட்பவர்
ஆட்டுக்குட்டி ஆனவர்
அகிலத்தின் இரட்சகர்.
விண்ணுலகின் வேந்தனவர்
விண்ணின் மண்ணின் ராஜன்அவர்
உன்னை விண்ணில் சேர்த்திட
மண்ணில் மீண்டும் வருபவர்.

4. உலகத்தில் இருந்தவர் உலகத்தைப் படைத்தவர்
உன்னதத்தின் ஒளியவர் உள்(ன்)மனதின் ஒளிஅவர்
இருளதை ஒழித்தவர் இகமதில் வந்தவர்
இருதயம் தனில்ஏற்க சொந்த பிள்ளை என்றவர்