உத்தம ஊழியனே – Uthama Oozhiyaney
உத்தம ஊழியனே,
உன்னத ஊழியனே,
உண்மையாய் இயேசுவுக்காய் ,
உழைத்திட்ட ஊழியனே,
அவமானம் அடைந்தாயோ, காயங்கள் சுமந்தாயோ,
இரட்சகர் இயேசுவுக்காய்,
இரத்தத்தை சிந்தினாயோ,
நிர்வாணம் தாங்கினாயோ,
தீக்காயம் எந்தினாயோ,
வறுமையில் வாடினாயோ,
உடைந்தும் நீ ஓடினாயோ
உனக்காக உண்டு ஒரு நாள்,
உன்னதர் உயர்த்திடும் நாள்,
பொற்கிரீடம் சூடும் பொன்னாள்,
கண்ணீரும் மகிழும் அந்நாள்,
நிர்வாணம் மாற்றிடுவார்,
வெண்ணங்கி உடுத்திடுவார்,
காயங்கள் ஆற்றிடுவார்,
அனைத்து உன்னை தேற்றிடுவார்
பாடுகள் சகித்ததினால் ஆளுகை செய்திடுவாய்.
சத்துருவாக எம்மை, எண்ணிடும் சிநேகிதரே,
முள்ளிலே உதைக்கிறதை,
உணராத சிநேகிதரே,
சபைகளை தகர்த்தீரோ,
வேதத்தை மிதித்தீரோ,
எங்களை கொல்வதையே ,
புனிதமாய் எண்ணினீரோ,
இவையெல்லாம் செய்ததினால் ,
இரட்சிப்பை நிறுத்தினீரோ,
தீப்பந்தம் கொண்டு கடலை, எரித்திட நினைத்தீரோ
நீதிமான் சிந்தும் இரத்தம்,
விதையாக விழுந்திடுமே,
எமக்கு பாரத்தை தந்து,
பலமாக எழுப்பிடுமே ,
எவ்வளவு ஒடுக்குவீரோ,
அவ்வளவாய் பலுகிடுவோம்,
சிலுவையின் அன்பிற்காய்,
மனதார மடிந்திடுவோம்
கிறிஸ்து எமக்கு ஜீவன் சாவு எம் ஆதாயமே.
இரட்சிப்பை நிறுத்தமுடியாது
இரட்சிப்பு கார்தருடையது.