இரவு பகல் கர்த்தருடைய – IRAVU PAGAL Kartharudaya
இரவு பகல் கர்த்தருடைய வேதத்தில்
பிரியமாய் இருக்கும் மனுஷன் பாக்கியவானே
1.நீர்க்கால்களின் ஓரத்தில் மரங்களைப்போல
தன் காலத்தில் தன் கனியை தந்து செழித்திருப்பானே-அவன்
இலையுதிரா மரம்போலவன் வாழ்வு மாறுமே
பாக்கியவானே அவன் பாக்கியவானே
2.கர்த்தரின் வேதம் குறைவற்றது மனமகிழ்ச்சி தரும்
அது ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் இரட்சிப்பை தந்திடும் பேதைகளை ஞானியாக்கும் சத்திய வேதமே
சத்திய வேதமே அது பக்தரின் கீதமே
3.துக்கத்திலே அழிந்திடாமல் காக்கும் தெய்வமே
நல் உத்தம மார்க்கம் காட்டி நம்மை சுத்தமாக்குமே
கால்களுக்கு தீபமாம் பாதைக்கு வெளிச்சமாம்
தீபமானது நல் வெளிச்சமானது