இயேசு என்றால் அற்புதம் – Yesu Endral Arputham
1. இயேசு என்றால் அற்புதம்
இயேசு என்றால் அதிசயம்
இயேசுவை நாம் சேவித்தால்
வாழ்நாள் எல்லாம் ஆசீர்வாதம்
2. இயேசு என்றால் மன்னிப்பு
இயேசு என்றால் இரட்சிப்பு
இயேசுவின் திரு இரத்தத்தால்
பாவம் எல்லாம் நீங்கிடும்
3. இயேசு என்றால் இரக்கம்
இயேசு என்றால் காருண்யம்
இயேசுவின் பொற் பாதத்தில்
என்றும் நான் அடைக்கலம்