இயேசுவே என் ராஜனே – Yesuvea en Rajanea
இயேசுவே என் ராஜனே
உமக்கென என்னை தருகின்றேன்
என் தாழ்விலும் என் உயர்விலும்
உம்மை பாடாமல் இருப்பேனோ
Chorus
என்னோடுஇருப்பவர்
என்னை காப்பவர்
கன்மலைமேல் உயர்த்திவைப்பவர்
நீர் ஒருவரே (2)
1.தாயினும் மேலாக
அன்பு நீர் வைத்தீரே
தந்தையை பார்க்கிலும்
என்னை தூக்கி நீர் சுமந்தீரே
உள்ளங்கையில் வரைந்தீரே
பெயர் சொல்லி அழைத்தீரே
உள்ளங்கையில் வரைந்தீரே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
2.ஆபத்து நேரத்தில் – என்
அரணான துணையானீர்
நெருக்கத்தின் வேளையில்
கை தூக்கி உயர்த்தினீர்
களிமண்ணாம் என்னையும் – உம்
பணி செய்ய வனைந்தீரே
களிமண்ணாம் என்னையும் – உம்
பணி செய்ய வனைந்தவர் நீரே
3.உலகத்தின் மனிதர்கள்
குறைசொல்லி என்னை வெறுத்தார்கள்
என் ராஜா என் குறைகளை
நிறைவாக்கி உயர்த்தினீர்
வீணென்று வெறுத்தோரின்
கண் முன்னே வாழ வைத்தீரே
வீணென்று வெறுத்தோரின்
கண் முன்னே வாழ வைத்தவர் நீரே
Yesuvea en Rajanea English Lyrics
Yesuvea en Rajanea
Ummakenna ennai tharukintean
En thazhvilum en uyarvilum
Ummai paadamal irupeano
chorus
Ennodu irupavar
Ennai kaapavar
Kanmalai mel uyarthi vaipavar
Neer oruvarea (2)
1.Thaayinum mealaka Anbu neer vaitherea
Thanthaiyai parkilum Ennai thooki neer sumanthirea
Ullamkaiyil varaintheare Peyar solli azhaithirea
Ullamkaiyil varainthearea Peyar solli azhaithavar neerea
2.Aabathu nerathil en Aranana thunaiyanear
Nerukathin velaiyil Kai thooki uyarthineer
Kazhimannam ennaiyum Um pani seiya vanaitherea
Kazhimannam ennaiyum Um pani seiya vanaithavar neerea
3.Ulakathin manitharkal Kurai solli ennai verutharkal
En raja en kuraikalai Niraivaaki uyarthineer
Veenentru veruthoorin Kan munnea vazha vaitherea
Veenentru veruthoorin Kan munnea vazha vaithavar neerea