இயேசுவே என் தேவனே – Yesuvae En Devanae

Deal Score0
Deal Score0

இயேசுவே என் தேவனே – Yesuvae En Devanae

இயேசுவே என் தேவனே
உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே
என் உடல் சோர்ந்தாலுமே
என் உள்ளம் உம்மை நாடுதே
தடைகள் நேர்ந்தாலுமே
என் தஞ்சம் நீர்தான்ஐயா –2

மாறாதவர் நீரே ..
விட்டு விலகாதவர் நீரே..
நிலையான உம் அன்பை என்னில் தந்தவரே –2
ஏழையான என்னை
நீர் நோக்கி பார்த்தீரே
மாறாவின் என் வாழ்வை மதுரம் ஆக்கினீரே –2

இசுவே.. என்தேவனே ..
உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே –2

நீதி உள்ளவர் நீரே
நீதி செய்பவர் நீரே
உம்மையன்றி எனக்கு வேறு யாரும் இல்லையே –2
ஆறாத என் காயம் ஆற்றிணீர்ஐயா
உம் இரக்கத்தாலே என்னை நீர் தேற்றிணீர்ஐயா –2

இசுவே.. என்தேவனே ..
உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே –2

Jeba
      Tamil Christians songs book
      Logo