இன்னமும் தாமதமேன் – Innamum Thamathamen
இன்னமும் தாமதமேன்
இன்ப சத்தம் கேளாயோ
இன்னலின்றி காத்திட
இன்றுன்னை அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
நித்திய ஜீவன் உண்டே
நீங்கிடா அவர் அன்பையே
நாடி நீ வந்திடாயோ
கல்வாரி மேட்டினிலே
கரங்களை விரித்தவராய்
காத்துன்னை இரட்சித்திட
கனிவுடன் அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
நித்திய ஜீவன் உண்டே
நீங்கிடா அவர் அன்பையே
நாடி நீ வந்திடாயோ
லோகத்தின் இன்பமெல்லாம்
மாறிடும் ஷணப்பொழுதில்
மாறிடா நேசர் இயேசு
மாண்புடன் அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
நித்திய ஜீவன் உண்டே
நீங்கிடா அவர் அன்பையே
நாடி நீ வந்திடாயோ
நாளை உன் நாளாகுமோ
நாடாயோ நாதனை நீ
நாச லோகை மீட்டிட
நாதன் அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
நித்திய ஜீவன் உண்டே
நீங்கிடா அவர் அன்பையே
நாடி நீ வந்திடாயோ