ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை – Alntha Setrinil Ahapatta Nammai

Deal Score0
Deal Score0

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை – Alntha Setrinil Ahapatta Nammai

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை
அணைத்து எடுத்தாரே
ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை
அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே

அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே
இயேசு ஆறுதல் அளிப்பாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே
இயேசு ஆறுதல் அளிப்பாரே

பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைப்பாரே
பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைப்பாரே
இயேசு கோபத்தை கலைப்பாரே

காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும்
ஆகமம் ஆனாரே
காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும்
ஆகமம் ஆனாரே
இயேசு ஆகமம் ஆனாரே

கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே
இயேசு கட்டுகள் அறுத்தாரே
கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே
இயேசு கட்டுகள் அறுத்தாரே

கல்வாரிப் பாதையில் பார சிலுவையை
நொந்து சுமந்தாரே
கல்வாரிப் பாதையில் பார சிலுவையை
நொந்து சுமந்தாரே
இயேசு நமக்கெனப் பிறந்தாரே

பூவினில் வந்த தேவனை துதித்தால்
தீவினை அகன்றிடுமே
பாலகன் இயேசுவின் நாமத்தை ஜெபித்தால்
பாசம் வளர்ந்திடுமே
நல்ல பாசம் வளர்ந்திடுமே

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை
அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே

அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே
இயேசு ஆறுதல் அளிப்பாரே

Jeba
      Tamil Christians songs book
      Logo